Breaking: இயக்குநர் மகிழ் திருமேனியின் அடுத்தப்பட ஹீரோ இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 13, 2019 04:11 PM
‘மீகாமன்’, ‘தடையற தாக்க’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வெற்றியை பெற்ற ‘தடம்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் வரும் நவ.24ம் தேதி முதல் பூஜையுடன் தொடங்கவிருப்பதாகவும், ஹீரோயின் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது ‘கைதி’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தகவல் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.