கமல் 60 நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 13, 2019 03:38 PM
'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் தனது 5 வயதில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கமலல்ஹாசன். இந்த வருடத்துடன் அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து 60 வருடங்கள் ஆகிறது.

நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநர், கதாசிரியர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்.
இதனையடுத்து கமல் 60 ஆண்டுகள் ஆவதைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து கமல்ஹாசனுக்கு பாராட்டும் தெரிவிக்கும் வகையில் இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி வருகிற நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது ரஜினிகாந்திற்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதலாக ஓவியம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த ஓவியத்தில் நடிகர் கமல்ஹாசனின் பல்வேறு தோற்றங்களில் உள்ள ஓவியங்கள் வரையப்பட்டு நடுவே ரஜினிகாந்தின் ஸ்டைலாக நின்று கொண்டிருப்பது போன்று வரையப்பட்டிருந்தது. இதனை ராஜ் கமல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.