“இதுக்காக 25 வருஷமா காத்திருக்கேன்..!” - சூப்பர் ஸ்டார் படம் பற்றி பேசிய தளபதி 64 பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் ஸ்ரீமன் ட்வீட் செய்துள்ளார்.

Thalapathy 64 star Sriman about working with Super Star Rajinikanth in Darbar

‘பிகில்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி, விஜே ரம்யா, டிக் டாக் புகழ் லிண்டு ரோணி, கல்யாணி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிகர் விஜய் அளிக்கும் ஊக்கம் ‘தளபதி 64’ ஷூட்டிங்கில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துவதாக கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில்,  “சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவு. எனக்கும் அந்த கனவு இருந்தது. 25 ஆண்டுகளாக அதற்காக காத்திருந்தேன். ‘தர்பார்’ படத்தில் என் கனவு நிஜமானது. இயக்குநர் முருகதாஸ் சாருக்கு நன்றி. என் வாழ்வில் உங்களை எப்போதும் மறக்க மாட்டேன். சூப்பர் ஸ்டாருடன் என்னை திரையில் காண எனக்கு ஆவலாக இருக்கிறது” என ஸ்ரீமன் குறிப்பிட்டுள்ளார்.