விஜய் செல்ஃபி முன்பே ப்ளான் பண்ணது – குட்டிகதை டைரக்டர் சொல்லும் சீக்ரட்!
முகப்பு > சினிமா செய்திகள்மாஸ்டர் படத்தின் குட்டிகதை பாடலின் லிரிக் வீடியோவை இயக்கிய லோகி பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் பாடிய குட்டி கதை பாடல் வெளியாகியாது.
இந்நிலையில் குட்டிகதை பாடலின் லிரிக் வீடியோவை இயக்கிய லோகி பாடல் குறித்து பிஹைன்ட்வுட்ஸ்க்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘குட்டி கதை பாடல் கேட்கும் போதே அனைவருக்கும் பிடித்துவிட்டது. இந்த லிரிக் வீடியோ இல்லாமலும் அப்பாடல் பெரிய ஹிட் ஆகியிருக்கும். இருந்தும் இத்தகைய பாடலுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றே இந்த லிரிக் வீடியோவை உருவாக்கினோம். பாடலை பார்த்த விஜய் மிகவும் நல்லா இருக்கு, குட் வொர்க் என பாராட்டினார். பாடலில் விஜய் செல்ஃபி எடுப்பது போல இருப்பது முன்பே திட்டமிடப்பட்டது தான். ஆனால், சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார். நெய்வேலியில் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
விஜய் செல்ஃபி முன்பே ப்ளான் பண்ணது – குட்டிகதை டைரக்டர் சொல்லும் சீக்ரட்! வீடியோ