நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் பற்றியும், அஜித் பற்றியும் தயாரிப்பாளர் போனி கபூர் பல சுவாரஸ்ய தகவல்கள Behindwood-ன் பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், Behindwood-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய தயாரிப்பாளர் போனி கபூர், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் நடிப்பு பற்றியும், அமிதாப் பச்சன் பற்றியும் பேசினார். பாலிவுட்டில் 70வயதில் அமிதாப் பச்சன் நடித்த ஒரு கதாபாத்திரத்தை, தென்னிந்தியாவில் தனது கெரியரின் உச்சத்தில் இருக்கும் ஒரு ஸ்டார் நடிகர் ஏற்று நடித்திருப்பது பாராட்டத்தக்கது. மனதில் தோன்றுவதை தைரியமாக செய்யும் குணம் கொண்டவர் அஜித்’.
இதுவரை அமிதாப் பச்சனிடம் பிங்க் தமிழ் ரீமேக் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால், நிச்சயமாக படத்தை அவருக்கு போட்டுக்காட்டுவேன். அஜித்தின் நடிப்பை பார்த்தால் அவர் நிச்சயம் மகிழ்ச்சியடைவார். அஜித்துடன் இணைந்து படம் பண்ண திட்டமிட்டபோது, ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்யலாம் என்ற ஐடியா கொடுத்தது அஜித் தான்.
மேலும், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை மும்பையில் தனது நெருங்கிய நண்பர்களும்=க்கும், குடும்பத்தினருக்கும் திரையிட்டு காட்ட திட்டமிட்டிருப்பதாகவும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
‘அமிதாப் 70-ல் செஞ்சத இவர் இப்போவே செஞ்சிருக்கார்’ - அஜித்தின் தைரியத்தை பாராட்டிய போனி கபூர் வீடியோ