சிம்பு-வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் 'மாநாடு' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக, ’ஹீரோ’ படத்தில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஷூட்டிங் திட்டங்கள் தற்போது வெளியாகி உள்ளது. வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதியில் இருந்து தொடங்க உள்ள ஷூட், முதல் 16 தினங்கள் கோயம்புத்தூரிலும் அடுத்த 12 நாட்கள் ஊட்டியிலும் நடைபெறுகிறது.
Tags : Simbu, Venkat Prabhu, Yuvan Shankar Raja, Maanaadu