தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் நாயகிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் முதன் முறையாக வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட்.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.