www.garudabazaar.com

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ மரணம்.. அனுஷ்கா உருக்கம்.. பிரபாஸின் பெரியப்பாவா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் காலமானார்.

telugu actor krishnam raju passed away நடிகர் கிருஷ்ணம் ராஜூ

பிரபல பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ. இவர், உடல்நலக்குறைவால் ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 83.

பல முன்னணி திரைப்படங்களில் நடித்த இவர், பிரபல பாகுபலி திரைப்பட நடிகர் பிரபாஸின் பெரியப்பா என்று சொல்லப்படுகிறது, மேலும் நடிகர் பிரபாச்ஸூடன் இணைந்து ராதே ஷியாம் திரைப்படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார். மேலும் இவரது மறைவு குறித்து நடிகை அனுஷ்கா ஷெட்டி,  “எங்கள் லெஜ்ண்ட் மற்றும் பரந்த இதயத்துக்கு சொந்தமான கிருஷ்ணம் ராஜூ அவர்கள் மறைவுக்கு இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு தெலுங்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இதேபோல், இவரது மறைவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

telugu actor krishnam raju passed away நடிகர் கிருஷ்ணம் ராஜூ

People looking for online information on Krishnam Raju, Prabhas will find this news story useful.