www.garudabazaar.com

இந்தி விக்ரம் வேதாவிலும் இசையில் மிரட்டிய சாம் CS.. பாலிவுட்டில் குவியும் பட வாய்ப்புகள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டையும் அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Sam CS music getting attention in Bollywood Vikram Vedha Hindi

ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. விக்ரம் வேதா மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தின் தீம் மியூசிக் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது.   இப்படி தொடர்ச்சியாக, இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார்  சாம் CS. அவரது இசையில் கண்ணம்மா எனும் மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது.  மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். 

தொடர்ந்து கைதி, அடங்க மறு,  சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சுழல் போன்ற தொடர் வெற்றிகளை அடுத்து, சமீபத்தில் வெளியான  ராக்கெட்ரி அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.  ராக்கெட்ரி வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தின் இந்திப்பதிப்பு டிரெய்லர் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  இந்த படத்தின் இசைக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இசையமைப்பாளர் சாம் CS க்கு பாலிவுட்டிலிருந்து பல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் சாம் CS.

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். இப்படத்திற்கு சாம் C.S இசையமைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் P S வினோத் ISC தமிழில் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். இந்தியில் புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடித்துள்ளனர். தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sam CS music getting attention in Bollywood Vikram Vedha Hindi

People looking for online information on Hrithik Roshan, Saif Ali Khan, Sam CS, Vikram Vedha Hindi Remake will find this news story useful.