பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படத்துல இணைந்த பிரபல முன்னணி நடிகை! வேறமாரி சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: பாகுபலி பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படத்தில் பிரபல ஸ்டார் நடிகை இணைந்துள்ளார்.

Disha Patani Joined Project K with Prabhas Deepika Padukone

Also Read | தாவணியில் 'விருமன்' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய அதிதி ஷங்கர்.. தீயாய் பரவும் வீடியோ

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இவரின் அடுத்த படமான 'சாஹோ' விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடித்தார். கடந்த மார்ச் மாதம் வெளிவந்த இந்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Disha Patani Joined Project K with Prabhas Deepika Padukone

பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை அறிவித்த பிறகு பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ப்ரோஜெக்ட் கே  படம், ஆதி புருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார், சந்திப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட்  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தின் முதல் கட்ட ஷீட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர்.

Disha Patani Joined Project K with Prabhas Deepika Padukone

இந்நிலையில் இப்படத்தில் நடிகை திஷா பதானி இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இந்த படத்தை தயாரிக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி இணைந்துள்ளார்.

Disha Patani Joined Project K with Prabhas Deepika Padukone

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Disha Patani Joined Project K with Prabhas Deepika Padukone

People looking for online information on Deepika Padukone, Disha Patani, Prabhas, Project K will find this news story useful.