''மெரினா பீச் குதிரை மாதிரி... '' - பிரபு தேவா - தமன்னாவின் 'தேவி 2' வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் 'தேவி'. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Sneak Peek Video released from Vijay Prabhu Deva's Devi 2

அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'தேவி 2' என்கிற பெயரில் உருவாகியுள்ளது.  விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபு தேவா, தமன்னா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற மே 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது. இந்த பபடத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் கோவை சரளா தனது ரகளையான டயலாக் டெலிவரியுடன் பிரபு தேவாவை கவர்வதற்கு தமன்னாவிடம் கிளாஸ் எடுக்கிறார்.

''மெரினா பீச் குதிரை மாதிரி... '' - பிரபு தேவா - தமன்னாவின் 'தேவி 2' வீடியோ இதோ வீடியோ