பிக்பாஸ் சீஸன் 1 மற்றும் சீஸன் 2 ஆகியவை மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது பிக்பாஸ் சீஸன் 3 தொடங்கவிருப்பதாகவும் அதனை கமல் தொகுத்து வழங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதனை ஒரு சிலர் மறுத்துவருகின்றனர். மேலும் இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் அஞ்சனா தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆர்வமிக்க புதிய செய்தி விரைவில் வரவிருக்கிறது. அதுகுறித்து விரைவில் அறிவிப்பேன். உங்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் தேவை'' என்று பதிவிட்டிருந்தார்.
இதனை அஞ்சனாவின் கணவரும் நடிகருமான சந்திரமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிக்பாஸ் 3 என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அஞ்சனா '100 நாள் ஜாலியா இருக்கலாம்னு பார்கிறான் பா' என பதிலளித்துள்ளார்.
Bigg Boss lll 🤷♂️🤔🤩 https://t.co/Qo8IDwJByU
— Chandramouli.P.S (@moulistic) May 13, 2019