ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த ஏப்ரல் 18 ஆண் தேதி வெளியான படம் 'காஞ்சனா 3'. 'காஞ்சனா', 'காஞ்சனா 2' ஆகிய படங்களின் தொடர்ச்சியாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்த படத்துக்கு தமன் பின்னணி இசையமைக்க, வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன் நிறுவனமும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 'காஞ்சனா 3' படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த காட்சி ஒன்றை அவரைப் போலவே மேக்கப் போட்டு ரசிகர் ஒருவர் டப் மாஸ் செய்திருந்தார்.
அதனை பாராட்டிய ராகவா லாரன்ஸ், 'பிரதர் ரொம்ப நல்லா இருக்கு. என்னை விட சிறப்பாக செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.
Brother very nice 👍
U did it better than me..
All the best.... #karhikeya3k pic.twitter.com/Uf8Amq8FUV
— Raghava Lawrence (@offl_Lawrence) May 30, 2019