பிரபல நடிகர் யோகிபாபு நயன்தாராவுடன் 'கோலமாவு கோகிலா', 'ஐரா' ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபுவுக்கு ஒரு பாடல் காட்சியும் இருந்தது.

அதனைத் தொடர்ந்து 'அதே கண்கள்' பட இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா ஒரு படத்தில் நடிக்கிறார். ஹாரர் காமெடி என கூறப்படும் இந்த படத்தில் யோகிபாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்தாஸ், மன்சூர் அலிகான் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் டான் கேக்கத்துர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 10 நாட்களும், அடுத்தகட்ட படப்பிடிப்பு 32 நாட்கள் காரைக்குடியிலும் நடைபெறவிருக்கிறது. மொத்தம் 42 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.