காமெடி நடிகர்கள் தம்பி ராமையா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி கூட்டணியில் "காவி ஆவி நடுவுல தேவி" என்ற நகைச்சுவை திரைப்படம் உருவாகி வருகிறது.

மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இப்படம் கிராபிக்ஸ் காட்சிகளுடன் பிரம்மிப்பூட்டும் வகையில் தயாராகி வருகிறது. இதில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். இப்படத்தில் காதலை சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணனாக யோகிபாபுவும், காதலை பிரிக்கும் டெரரான தாதாவாக மொட்டை ராஜேந்திரனும், அவருக்கு துணையாக மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் இணைந்து அடிக்கும் கலட்டாவாக இப்படம் உருவாகி வருகிறது.
வி.சி.குகநாதன் கதை எழுத இப்படத்தை புகழ்மணி இயக்கி வருகிறார். “காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.