'தில்லுக்கு துட்டு 2'வுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகர் சந்தானம் விஜய் ஆனந்த் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தமிழ் சினிமாவின் தற்போதைய பிரபல காமெடியன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு தீபக்குமார் ஒளிப்பதிவு செய்ய இந்த படத்துக்கு டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்துக்கு 'டகால்டி' என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறதாம்.
அதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் தற்போது இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. கண்டேன் காதலை , சேட்டை ஆகிய படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் இந்த படத்தை மசாலா பிக்ஸ்கிற்காக ஆர். கண்ணன் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்ஷனுக்காக எம்.கே.ராம் பிரசாத் இருவரும் இணைத்து தயாரிக்கவுள்ளனர்.