யோகி பாபுவுக்கு போட்டியா ? - பிரபல ஹீரோயினை கலாய்த்த பாடகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மெட் கலா (Met Gala) என்ற பெயரில் உடைகள் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெறும். அங்கு ஹாலிவுட் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளை சேர்ந்த திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வருகின்றனர்.

Srinivas compares Priyanka Chopra with Yogi Babu for Met Gala Event

இந்த கண்காட்சியில் திரையுலக பிரபலங்கள் விதவிதமான உடைகள், வித்தியாசமான மேக்கப் என பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் திங்கட்கிழமையில் நடைபெறுவது வழக்கம். இங்கு இந்திய திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வருடத்துக்கான மெட் கலா மே 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்களுடன் இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் பிரியங்காவின் உடை குறித்தும் மேக்கப் குறித்தும் சமூகவலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாக பாடகர் ஸ்ரீநிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், யோகிபாபுவுக்கு போட்டி வந்து விட்டது. என்று பதிவிட்டுள்ளார்.