‘தேவி 2’-க்கு பின் பிரபுதேவா-தமன்னா இணைந்து மிரட்டும் த்ரில்லர் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தேவி 2’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை தமன்னா மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ள ‘காமோஷி’ திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

After Devi 2, Tamannaah Bhatia's next with Prabhudeva titled'Khamoshi' to be releasing on May 31st

‘உன்னை போல் ஒருவன்’, ‘பில்லா 2’ திரைப்படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்கத்தில் தமிழில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதனிடையே ஹிந்தியில் சக்ரி டோலெட்டி இயக்கி வரும்‘காமோஷி’ திரைப்படத்தில் நடிகை தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் பிரபுதேவா, பூமிகா சாவ்லா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பி.ஒய்.எக்ஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் மே.31ம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீர் டண்டோன் மற்றும் சத்யா மாணிக் அஃப்சார் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை தமன்னா காது கேளாமல், வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்  தொடர்ந்து பிரபுதேவா-தமன்னா இணைந்து நடித்துள்ள ‘தேவி 2’ ஹாரர் த்ரில்லர் திரைப்படமும் வரும் மே.31ம் தேதி ரிலீசாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.