''மதுமிதா தற்கொலைக்கு தூண்டியவரை ஏன் வெளியே அனுப்பல ? போலீஸ் விசாரணை தேவை''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) கமல்ஹாசன் மேடையேறினார். அதற்கு முன் பிக்பாஸிடம் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது.

S.VE.Shekher tweets about Madhumitha Kavin Losliya Kamal's Bigg Boss 3

அதில், 'டாஸ்கிற்கு பிறகு நடைபெற்ற வாக்குவாதத்தின் காரணமாக மதுமிதா தன்னையே துன்புறுத்திக்கொண்டார். அது பிக்பாஸ் விதிக்கு முரண் என்பதால் அவர் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்' என்று கூறப்பட்டது.

அதன் பிறகு கமல் அவரை ஆற்றுப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தார். ஆனால் உண்மையில் மதுமிதாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை.  இது பெரிதும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா⁉️ ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை.'' என்றார்.