இந்தியன் 2-வில் இணையும் கமல்ஹாசன் எப்போ தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 19, 2019 03:28 PM
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் அதனை முடித்த பிறகு ‘இந்தியன் 2’ ஷூட்டிங்கில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
தற்போது வரும் ஆக.26ம் தேதி முதல் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்கில் கலந்துக் கொள்வார் என்ற தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இப்படம் வரும் 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.