'அவரு காட்ஃபாதர்.. அவர் கூட படத்துல வர சீன் எல்லாம்' பாடல் வெளியிட்டில் சூர்யா சொல்லியது என்ன.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூரரைப் போற்று பாடல் வெளியீட்டின் போது சூர்யா ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

surya shares views in soorarai pottru veyyonsilli in airport

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இத்திரைப்படம் விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. நடிகை அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருனாஸ், காளி வெங்கட் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் வெய்யோன்சில்லி என்கிற பாடலை இன்று விமானத்தில் வைத்து வெளியிட்டனர்.

இதையடுத்து சூர்யா கூறியதாவது, 'இந்த படத்திற்காக கிடைக்கும் பாராட்டுக்கள் யாவும் இயக்குநர் சுதா கொங்கராவையே சேரும். பத்து வருடங்கள் அவர் இந்த கதைக்காக உழைத்திருக்கிறார். வெறும் ஒரு சதவீத மக்கள் மட்டுமே விமானத்தில் செல்ல முடியும் என்கிற நிலையை மாற்றி காட்டியவர் ஜி.ஆர்.கோபிநாத். என் வாழ்க்கையில் மிகச்சிறந்த நேரமாக இதை கருதுகிறேன். இந்த படத்தில் மோகன் பாபு ஒரு காட்ஃபாதர் போல நடித்துள்ளார். அவருடன் படத்தில் வரும் சீன் எல்லாம் ஹைலைட்டாக இருக்கும். இந்த விமானத்தில் இருக்கும் போட்டோவில் இருப்பது சூர்யா கிடையாது. இது இந்தியாவில் கொண்டாடப்படாத பல ஹீரோக்கள். அப்படி தான் நான் இதை பார்க்கிறேன். இந்த நிகழ்ச்சியில் வசதி வாய்ப்பில்லாத மாணவர்கள் கலந்துகொள்ள அவர்களின் கனவை பற்றி எழுத சொல்லி போட்டி நடத்தினோம். அப்படி வெற்றி பெற்ற பலர், எங்களுக்கு பதிலாக என் அண்ணனை, அம்மாவை, பாட்டியை அழைத்து செல்லுங்கள் என கூறினார்கள். அவர்களின் பெரிய மனதை கண்டு வியந்தேன். இப்படி ஒரு அனுபவத்தை சாத்தியமாக்கிய ஸ்பைஸ் ஜெட்டுக்கு எனது நன்றிகள்' என சூர்யா கூறியுள்ளார்.

Full Video is here. 

'அவரு காட்ஃபாதர்.. அவர் கூட படத்துல வர சீன் எல்லாம்' பாடல் வெளியிட்டில் சூர்யா சொல்லியது என்ன.? வீடியோ

Entertainment sub editor