சூர்யாவின் சூரரைப் போற்று அடுத்த அப்டேட் - 'வெய்யோன் சில்லி' பாட்டு வானத்துல ரிலீஸ்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்துள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தில் சூர்யா பாடிய மாறா பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இதனையடுத்து வெய்யோன் சில்லி என்ற பாடல் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriya's Soorarai Pottru, hundred first time flyers are flying with spicejet and Veyyon Silli launch

சூரரைப் போற்று பட அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது வெளியான அறிவிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் நூறு பேர் முதல் முறையாக  நாளை (பிப்ரவரி 14)விமானத்தில் பயணம் செய்யவிருக்கின்றனர்.

அப்போது விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது வெய்யோன் சில்லி பாடல் வெளியாகவிருக்கிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி, மோகன் பாபு, காளி வெங்கட், ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Entertainment sub editor