விமானத்தில் சூரரைப் போற்று பாடல் ரிலீஸ் - காதலர்களுக்கு விருந்தாய் வந்த வெய்யோன்சில்லி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் பாடல் இன்று விமானத்தில் வெளியாகிறது.

suriya gv prakash soorarai pottru veyyonsilli song launch in airport

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தற்போது சூர்யாவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இத்திரைப்படன் உருவாகியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் நடிகை அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று படத்தின் வெய்யோன்சில்லி பாடல் இன்று விமானத்தின் வெளியாகிறது. இதற்காக படக்குழு மற்றும் முதல் முறையாக விமானத்தில் செல்லும் 100 மாணவர்களும் ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளனர். மேலும் சூர்யாவின் தந்தை சிவகுமார், ஜிவி பிரகாஷ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளனர். இதனிடையே நடிகர் சூர்யா ஸ்டைலிஷான லுக்கில் ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார். கருப்பு கோட் அனிந்து அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்து வருகிறது.

மேலும் ஸ்பெஷலாக வெய்யோன் சில்லி பாடலின் ஒரு நிமிட வீடியோ ப்ரோமோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது வெய்யோன்சில்லி முழுப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். ஹரிஷ் சிவராமக்ருஷ்ணன் பாடியுள்ளார். 

 

விமானத்தில் சூரரைப் போற்று பாடல் ரிலீஸ் - காதலர்களுக்கு விருந்தாய் வந்த வெய்யோன்சில்லி வீடியோ

Entertainment sub editor