சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பற்றி நடிகர் ஷாந்தனு பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கும் இத்திரைப்படம் விமான செவை நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ளது. இதில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படம் சம்மருக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் ஷாந்தனு சூரரைப் போற்று படத்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'தனிப்பட்ட முறையில் நெடுமாறன் கேரக்டருக்காக சூர்யா என்ன செய்தார் என்பதை நான் அறிவேன். இது வேற லெவல் டெடிகேஷன்' என பதிவிட்டுள்ளார். சூரரைப் போற்று படத்தில் நடிகர் சூர்யா மிகவும் மிடுக்கான அதே நேரத்தில் கோபம் கொண்ட ஒரு இளைஞராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
I personally got to know what @Suriya_offl anna did for his character in #SooraraiPottru
🔥 Vera level dedication he is 🔥 https://t.co/63HB93AAbn
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) February 11, 2020