பிரபல டிவி தொகுப்பாளர் தீபக்கின் புதுப்படம் - வெளியான வீடியோ...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிவி நடிகர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் திரையுலகிலும் தடம் பதித்து வருகின்றனர். அதற்கு முன் சிலர் இருந்தாலும் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய உதாரணமாக விளங்குகிறார்.  அதன் பிறகு கவின், மாகபா ஆனந்த், மிர்ச்சி செந்தில், ரியோ என இந்த பட்டியல் சற்று நீளம்.

TV Anchor Deepak Shared a Video with Motta Rajendran

அதன் ஒருபகுதியாக  'தென்றல்' தொலைக்காட்சி தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தீபக். பின்னர் அவர் ஜோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நடிகர் தீபக் 'தண்ணில கண்டம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.  தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மொட்ட ராஜேந்திரனுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஷூட்டிங்கிற்கு லேட்டானா என்ன ஆகும் தெரியுமானு கேட்க, கொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்' என்றார்.

Entertainment sub editor