போக்கிரி ரிட்டர்ன்ஸ் : அடுத்து தளபதியின் டார்கெட்.. மாஸ்டர் சம்மர்.. மாஸ் பொங்கலா..? Get Ready

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொங்கல் என்றாலே கொண்டாட்டம் தான். நான்கு நாட்கள் நடக்கும் பண்டிகை, பக்காவான விடுமுறை என எப்போதும் பொங்கல் சீசனுக்கு தனி மவுசு. அப்படிப்பட்ட கொண்டாட்ட நேரத்தில் தளபதி விஜய் படம் வந்தால்... டபுள் கொண்டாட்டம் தானே. அதை டார்கெட்டில் வைத்து தான் விஜய் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்க போவதாக  தெரிகிறது.

master vijay aims sudha kongara thalapathy 65 for pongal

விஜய்யும் பொங்கலும் எப்போதுமே செம காம்போ. இன்றுவரை விஜய் நடிப்பின் ஒரு முக்கியமான படமாக சொல்லப்படும் கண்ணுக்குள் நிலவு வெளியானது 2000-ஆம் பொங்கல் தினத்தன்று தான். அதே போல அடுத்தடுத்த பொங்கல் நாட்களில் வெளியான ஃப்ரென்ட்ஸ், வசீகரா படங்கள் விஜய்யை எல்லோர் வீட்டிலும் ஒருவராக சேர்த்தது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி சாந்தமாக இருந்த விஜய் பட்டை தீட்டிய அருவாளோடு களமிறங்கிய படம் தான் திருப்பாச்சி. 2005 பொங்கலுக்கு திருப்பாச்சி வெளியாக, சிட்டி முதல் கிராமம் வரை படம் செம ஹிட். ரசிகர்களுக்கு மட்டுமன்றி குடும்பம் குடும்பமாக மக்கள் கொண்டாடும் கமர்ஷியல் கரும்பாக இனித்தது திருப்பாச்சி. அடுத்த அதிரடி போக்கிரி. இந்த பொங்கல் நமக்கு செம கலக்‌ஷன்ம்மா என ஓப்பனிங் சீனிலேயே விஜய் சொன்ன வசனம் நிஜமானது 2007 பொங்கலின் வரலாறு. இதையடுத்து விஜய்யின் க்ளாசிக் படங்களான காவலன், நண்பனும் கமர்ஷியல் அதிரடியான ஜில்லா, பைரவாவும் வெளியானதும் பொங்கலன்று தான். இப்படி பொங்கலுக்கு விஜய்க்கும் செம வேவ்லென்த் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் இப்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்தி வரும் மாஸ்டர் டீம், படத்தை சம்மருக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதனிடையே விஜய்யின் அடுத்த படத்தை சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா இயக்க போகிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தனது முந்தைய படங்களான மெர்சல், சர்க்கார், பிகில் ஆகியவற்றை தீபாவளி அன்று ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார் விஜய். ஆனால் இந்த வருடம் மாஸ்டர் படத்தை சம்மருக்கு வெளியிடுவதால் அது மிஸ் ஆகிறது. அடுத்த படத்தின் வேலைகளை உடனே ஆரம்பித்தாலும் அதை தீபாவளிக்கு வெளியிடுவது கஷ்டம்தான். இதை உணர்ந்த விஜய் தனது அடுத்த படத்தை பொங்கல் விருந்தாக கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. மார்ச் மாதத்திற்கு முன் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தளபதி 65 படத்திற்கான வேலைகளில் அவர் இறங்க போவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் அடிப்பட தொடங்கியுள்ளன. அதுவுமில்லாமல் பொங்கலன்று ஒரு ப்ளாக்பஸ்டர் கொடுக்க வேண்டும் என வரும் பொங்கலை டார்கெட் வைத்து விஜய் நொறுக்கப்போகிறார் என்று ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அப்படி ரசிகர்களின் விருப்பமும் நம்ம தளபதியின் அடுத்தபட வேலையும் பொங்கலை குறிவைத்து நடந்தால், 2021 பொங்கலுக்கு நம்ம தளபதியின் தரமான சம்பவம் இருக்கும்!

என்ன நண்பா தளபதி பொங்கல் கொண்டாட ரெடியா!

Entertainment sub editor