பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் சூர்யாவின் ‘காப்பான்’ - வசூல் விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 22, 2019 11:50 AM
நடிகர் சூர்யா, மோகன் லால் நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் வார இறுதி நாட்களில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் கடந்த செப்.20ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூலாக சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ.88 லட்சமும், தமிழ்நாடு முழுவதும் இந்த படம் ரூ.7.25 கோடியும் வசூலித்தது.
இப்படத்தின் இரண்டாவது நாள் வசூலாக சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ.1.03 கோடி வரை வசூலித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாளான இன்று காலை 8மணி காட்சிகள் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாகி உள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் ‘காப்பான்’ திரைப்படத்திம் வசூல் அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.