சூர்யா நடித்துள்ள 'காப்பான்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 21, 2019 06:32 PM
லைக்கா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் 'காப்பான்'. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.பிரபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இராணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ.88 லட்சமும், தமிழ்நாடு முழுவதும் இந்த படம் ரூ.7.25 கோடியும் வசூலித்துள்ளது.