சூர்யாவின் ரசிகர்களே தயாரா ? - 'காப்பான்' First Show எப்போ தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 07, 2019 09:50 PM
லைக்கா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா ஹீரோவாக நடித்து வரும் படம் காப்பான். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இராணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, எம்.எஸ்.பிரபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் குறித்து ரோகிணி திரையரங்க செயல் இயக்குநர் ரேவந்த் சரண் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், 'காப்பான் படத்தை அதிகாலை 1 மணிக்கு திரையிட முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். முடியவில்லையென்றால் 4 மணிக்கு முதல் காட்சி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Trying 1AM for #Kaappaan . If not first show will be at 4AM !!! #KaapaanTrailerFromTodayatRohini@RohiniSilverScr @Suriya_offl @LycaProductions
— Rhevanth Charan (@rhevanth95) September 7, 2019