இதனால் சென்னை திரும்பிய சூர்யாவின் 'சூரரைப் போற்று' படக்குழு - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எம்.எஸ்.பிரபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Suriya and GV Prakash's Soorarai Pottru team returns Chennai

இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனையடுத்து சூர்யா இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் படக்குழு மூன்றாம் கட்டப்பிடிப்பு முடித்துக்கொண்டு நேற்று(செப்டம்பர் 13) சென்னை திரும்பியுள்ளனர்.