www.garudabazaar.com

“ஞானவேல் ராஜா - சிவா - சூர்யா 3 பேரும் டெட்லி COMBO”.. Suriya42 குறித்து தனஞ்செயன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ளனர் மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன் அடங்கிய குழுவினர்.

Suriya42 Present Portion story shoot update by Dhananjayan

Also Read | "எமோஷனலா டச் பண்ணுச்சு.!" - கவின் நடித்த ‘டாடா’ படத்த பத்தி நடிகர் லாரான்ஸ் நெகிழ்ச்சி..

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர் புதிய முயற்சி தான் ‘ஸ்கிரிப்டிக்’.

பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் 'டூப்பாடூ' போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்த மதன் கார்க்கி மற்றும் பிரபல தயாரிப்பாளர்-விநியோகஸ்தர், பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரி நிறுவனர் கோ. தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக, “ஸ்கிரிப்டிக்” (SCRIPTick) என்ற பெயரில் ஓர் திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ளனர்.

Suriya42 Present Portion story shoot update by Dhananjayan

இந்த முன்னெடுப்பு குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஸ்கிரிப்டிக் இணை நிறுவனர் கோ. தனஞ்ஜெயன், “புதிய முயற்சியான ஸ்கிரிப்டிக்-ஐ வெளிக்கொணர, பலவற்றில் முன்னோடியாக இருக்கும் மதன் கார்க்கியுடன் இணைவது பெருமைக்குரிய தருணம் ஆகும். சினிமா துறையில் சிறந்த திரைக்கதைகள் வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக எனக்குள் இருந்தது. திரைக்கதை நிபுணர்களின் பல்வேறு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நல்ல திரைக்கதைகளைக் கண்டுபிடிப்பதுதான் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். அத்தகைய திரைக்கதைகளைப் பெற, நூற்றுக்கணக்கான கதை சுருக்கங்கள் அல்லது திரைக்கதைகளை அவர்கள் படிக்க வேண்டும். அந்த பெருமுயற்சியைக் குறைத்து, சிறந்த திரைக்கதைகளை மட்டுமே அவர்களுக்கு வழங்க நிபுணர்களின் பங்களிப்போடு ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கி தொடங்கப்படுகிறது. திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் இது ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

Suriya42 Present Portion story shoot update by Dhananjayan

இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன்,  சூர்யா 42 திரைப்படத்தை பற்றி பேசினார். அப்போது தயாரிப்பாளர் தனஜெயன், “சூர்யா 42 திரைப்படம் பிசினஸ் ரீதியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தப் போகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று தற்காலத்தில் இன்னொன்று கடந்த காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்கள்.

Suriya42 Present Portion story shoot update by Dhananjayan

தற்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களுக்கான அந்த போர்ஷன் படப்பிடிப்பு மிக விரைவில் நிறைவடைய விருக்கிறது. அதுவும் தற்போது அந்த படப்பிடிப்பு நிற்காத - இடைவிடாத ஒரு படப்பிடிப்பாக நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. சூர்யா - சிறுத்தை சிவா - தயாரிப்பாளர் ஞானவேல் என்கிற டெட்லி காம்பினேஷன் இந்த திரைப்படத்தை வேற மாதிரி உருவாக்கி வருகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

Also Read | Madhan Karky : பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்பலாம் அதிக Songs எழுதாதற்கு காரணம் இதுதானா..? செம..

“ஞானவேல் ராஜா - சிவா - சூர்யா 3 பேரும் டெட்லி COMBO”.. SURIYA42 குறித்து தனஞ்செயன்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya42 Present Portion story shoot update by Dhananjayan

People looking for online information on Dhananjayan, Madhan Karky, Siruthai Siva, Suriya, Suriya 42 will find this news story useful.