www.garudabazaar.com

'SURYA 42'.. சாதனை விலைக்கு மிக முக்கிய உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! செம்ம ரெக்கார்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின்

Suriya 42 Movie Audio Rights Bagged by Saregama Deets

முக்கிய உரிமம் குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Also Read | THUNIVU: கேங்ஸ்டர் லுக்கில் நடிகர் அஜித்.. மிரட்டலான போஸ்டருடன் வெளியான 3rd SINGLE அப்டேட்!

நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

Suriya 42 Movie Audio Rights Bagged by Saregama Deets

இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் பூஜை கடந்த (21.08.2022) அன்று  அகரம் பவுண்டேஷனில்  நடந்தது.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.

Suriya 42 Movie Audio Rights Bagged by Saregama Deets

இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார். திஷா பட்டாணி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

சிலநாட்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Suriya 42 Movie Audio Rights Bagged by Saregama Deets

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த  ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி துவங்கியது.   இந்த படத்தின் கோவா படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்தது.  இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை மிகப் பெரிய சாதனை விலைக்கு பிரபல சரிகம நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கைப்பற்றியுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | Love Today படத்துக்கு முதல்ல வச்ச டைட்டில் இது தான்.. நடிகர் சத்யராஜ் EXCLUSIVE!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya 42 Movie Audio Rights Bagged by Saregama Deets

People looking for online information on Saregama, Siruthai Siva, Suriya, Suriya 42 Movie, Suriya 42 Movie Audio Rights will find this news story useful.