www.garudabazaar.com
iTechUS

பிரபல மலையாள நடிகருடன் சூர்யா - ஜோதிகா... இணையத்தை கலக்கும் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.

Suriya and Jyothika meet Prithviraj and his wife

Also Read | "சைவம் சாப்பிடுவறங்கள பாத்தாலே பாவமா இருக்கும்".. ரஜினி கலகல பேச்சு..!!

இவரது நடிப்பில் சூரரைப் போற்று, எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில், சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி இருந்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. அதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை சூர்யா வென்றிருந்தார்.

இதற்கு மத்தியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த 'விக்ரம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்று இருந்தது.

Suriya and Jyothika meet Prithviraj and his wife

இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத சூர்யா 42 என்ற  திரைப்படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடித்து வருகிறார். மேலும் தேவிஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார்.

இதற்கடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிகர் சூர்யா நடிக்கிறார். அடுத்தடுத்து தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து வரும் நடிகர் சூர்யா சமீபத்தில் தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடன் மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவியை சந்தித்துள்ளார்.

Suriya and Jyothika meet Prithviraj and his wife

Image Credit : Twitter

இந்த நிலையில், 4 பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "Friends who inspire! ❤️" என்றும் தனது கேப்ஷனில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை நடிகர் சூர்யா ரீட்வீட் செய்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகியும் வருகிறது.

Also Read | ஷாருக்கான் நடித்த 'பதான்'.. இந்தி சினிமா வரலாற்றில் முதல்நாளிலே அதிக வசூல்! இத்தனை கோடியா?

தொடர்புடைய இணைப்புகள்

Suriya and Jyothika meet Prithviraj and his wife

People looking for online information on Jyothika, Prithviraj, Suriya, Suriya and Jyothika meet Prithviraj will find this news story useful.