www.garudabazaar.com

Rolex சூர்யாவை சந்திச்ச ஜாம்பவான் சச்சின்.. புகைப்படத்தை பகிர்ந்து தமிழிலேயே போட்ட கேப்ஷன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அதே போல, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான 'விக்ரம்' திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா.

Sachin Tendulkar meet Suriya and his caption in tamil viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் படத்தில் நடித்த பிரபல நடிகையின் திருமணம்.. வைரலாகும் ஃபோட்டோஸ்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!

இதற்கிடையில், சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கி இருந்தார் சூர்யா. இதனைத் தொடர்ந்து, சூர்யா அடுத்து நடித்து வரும் படத்தின் மீது தான் அனைவரின் பார்வையும் உள்ளது. "Suriya 42" என குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் சிவா இந்த படத்தை இயக்கி வரும் நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

Sachin Tendulkar meet Suriya and his caption in tamil viral

Images are subject to © copyright to their respective owners.

சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி இணைந்து நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யா தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருந்தது. முன்னதாக, Suriya 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்திருந்தது. இதுதான் காரணமாக அடுத்தடுத்து அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Sachin Tendulkar meet Suriya and his caption in tamil viral

Images are subject to © copyright to their respective owners.

Suriya 42 படத்தை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்திருந்தார். இது தொடர்பான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா பகிர்ந்திருந்தார்.

Sachin Tendulkar meet Suriya and his caption in tamil viral

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, சூர்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், தமிழில், "இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது 😃. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது, @Suriya_offl மனமார்ந்த வாழ்த்துக்கள்" என தமிழிலேயே கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | சச்சின் - சூர்யா திடீர் சந்திப்பு.‌. வைரல் பதிவு! தீயாய்‌ பரவும் ஃபோட்டோ..

தொடர்புடைய இணைப்புகள்

Sachin Tendulkar meet Suriya and his caption in tamil viral

People looking for online information on Sachin tendulkar, Sachin Tendulkar meet Suriya, Suriya will find this news story useful.