www.garudabazaar.com

ஸ்வீட் எடுங்க 😍.. அப்பாவான 'மின்னல் முரளி இயக்குனர்' & நடிகர் பசில் ஜோசப்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவில் நடிகரும், இயக்குனருமாக வலம் வருபவர் பசில் ஜோசப்.

Director Basil Joseph Elizabeth Samuel blessed with baby girl

Images are subject to © copyright to their respective owners.

Also Read | போதைக்கு எதிரான போர்க்களம் .. கையெழுத்திட்ட இயக்குநர் H.வினோத் - விபரம்.‌

பசில், ஜான்.இ.மேன், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, பல்து ஜான்வர், டியர் ஃப்ரெண்ட் மற்றும் ஜோஜி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

‘குஞ்சிராமாயணம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பசில் ஜோசப். 'கோதா' மற்றும் 'மின்னல் முரளி' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர். மின்னல் முரளி திரைப்படம் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனராக பசில் உருவெடுத்துள்ளார்‌.

நேற்று பசில் ஜோசப் மற்றும் அவரது மனைவி எலிசபெத்துக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் பசில் பகிர்ந்து கொண்டார்.

Director Basil Joseph Elizabeth Samuel blessed with baby girl

Images are subject to © copyright to their respective owners.

ஹோப் எலிசபெத் ஜோசப் என மகளுக்கு பெயரும் சூட்டியுள்ளார். மனைவியின் எலிசபெத் & தனது ஜோசப் ஆகிய பெயருடன் ஹோப் பெயரை இணைத்து இந்த பெயரை சூட்டியுள்ளார். இது தொடர்பான பதிவில், “எங்கள் மகிழ்ச்சியின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஹோப் எலிசபெத் பசில்! அவள் ஏற்கனவே எங்கள் இதயங்களைத் திருடிவிட்டாள், எங்கள் விலைமதிப்பற்ற மகளின்  அன்புடன் நாங்கள் நிலவுக்கு மேல் இருப்பது போல உணர்கிறோம். அவள் வளர்வதையும் அவளிடமிருந்து ஒவ்வொரு நாளும் நாங்கள் கற்றுக்கொள்வதைக் காண ஆவலுடன் உள்ளோம்". என பசில் ஜோசப் பதிவிட்டுள்ளார்.

Director Basil Joseph Elizabeth Samuel blessed with baby girl

Images are subject to © copyright to their respective owners.

நடிகர்கள் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஜிஷா விஜயன், அன்னா பென், மஞ்சிமா, மாளவிகா, ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் பசிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Also Read | சச்சின் - சூர்யா திடீர் சந்திப்பு.‌. வைரல் பதிவு! தீயாய்‌ பரவும் ஃபோட்டோ..

தொடர்புடைய இணைப்புகள்

Director Basil Joseph Elizabeth Samuel blessed with baby girl

People looking for online information on Basil Joseph, Elizabeth Samuel will find this news story useful.