www.garudabazaar.com

சச்சின் - சூர்யா திடீர் சந்திப்பு.‌. வைரல் பதிவு! தீயாய்‌ பரவும் ஃபோட்டோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா.

Actor Suriya met Former Indian Cricketer Sachin Tendulkar

Images are subject to © copyright to their respective owners.

Also Read | போதைக்கு எதிரான போர்க்களம் .. கையெழுத்திட்ட இயக்குநர் H.வினோத் - விபரம்.‌

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன்  திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் சூர்யா பெற்றார்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த  'விக்ரம்' திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் சிறப்பு கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இதற்காக சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக கமல்ஹாசன் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya met Former Indian Cricketer Sachin Tendulkar

Images are subject to © copyright to their respective owners.

தற்போது சூர்யா,   சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya met Former Indian Cricketer Sachin Tendulkar

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

Actor Suriya met Former Indian Cricketer Sachin Tendulkar

Images are subject to © copyright to their respective owners.

விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் துவங்க உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "மரியாதை & அன்பு" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது டிரெண்டாகி வருகிறது.

Also Read | துணிவு AK காஸ்டியூமில் வந்த சிறுவன்.. பார்த்ததும் அஜித் செய்த நெகிழ்ச்சி செயல்! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Suriya met Former Indian Cricketer Sachin Tendulkar

People looking for online information on Indian Cricketer, Sachin tendulkar, Suriya met Indian Cricketer Sachin Tendulkar, Surya will find this news story useful.