சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் கடந்த மே 31 ஆம் தேதி வெளியான படம் 'என்ஜிகே'. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாலா சிங், பொன்வண்ணன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 'நான் என்ஜிகேவிற்கு கிடைத்த அன்பு மற்றும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். இந்த படத்தை திறனாய்வு செய்த, வித்தியாசமான முயற்சியை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. ஒட்டுமொத்த நடிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி' என்று தெரிவித்தார்.