டீரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்திருக்கும் படம் 'என்ஜிகே'. இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் சூர்யாவிற்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில் சூர்யாவின் கேரளா ரசிகர் மன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, இயக்குநர் செல்வராகவனின் படத்தை கொண்டாட பத்து வருடங்கள் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டு இன்று ஜூன் 5 மீண்டும் ரசிகர் காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.