செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் 'என்ஜிகே'. இந்த படம் மே 31 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், பாலா சிங், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை பிரவீன் கேஎல் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்ஆர் பிரபு எஸ்ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் ஹோட்டல் ரூம் ஒன்றில் சூர்யாவும், ராகுலும் தனியாக சந்தித்துக்கொள்வார்கள்.
இதுக்குறித்து ரோகினி தியேட்டரில் ஆடியன்ஸ் விமர்சன பலகையில் ஒருவர் 'இருவருக்குமிடையே ஏதும் நடந்ததா?' என கிண்டலாக கேட்டார்.
அதற்கு செல்வராகவன் 'ம்ம்...அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது அந்த ஹோட்டல் ரூம் இரண்டாம் பாதி காட்சியிலேயே இருக்கும் இன்னும் தேடுங்கள்' என்று பதில் அளித்துள்ளார்.
Mm. Interesting! Is there "something" between NGK and Vanathi?
The answer lies in the scene where NGK meets vanathi in her hotel room in the second HALF. Keep decoding!#NGK#NGKFIRE https://t.co/bxVoipGmqG
— selvaraghavan (@selvaraghavan) June 3, 2019