www.garudabazaar.com

"சூரரைப்போற்று" படத்தை தொடர்ந்து இவரது BIOPIC-ல் நடிக்கும் சூர்யா..? இயக்குநர் இந்த நடிகரா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சூர்யா.  ஒருபுறம் பெரும்போக்கு திரைப்படங்களாக கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், இன்னொருபுறம் சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற பரீட்சாத்திய முறை படங்களிலும் நடித்தார்.

Suriya to act Britannia Ranjan Pillai biopic deets

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “ஒரு நேரத்துல பாலிவுட் படங்கள் ஹிட் கொடுக்கலயா..?” - விட்டுக் கொடுக்காமல் பேசிய அர்ஜூன்.!

இந்த படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பையும், நற்பெயரையும் ஈட்டித்தந்தன. அந்த வகையில் ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில்  உருவாகி அமேசான் ப்ரைமில் வெளியான சூரரைப் போற்றுத் திரைப்படம், ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படத்துக்கு கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்வில்  சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும் சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து மொழிப் பிரிவுகளிலும் ஐந்து விருதுகள் வழங்கப்பட்டன. 

Suriya to act Britannia Ranjan Pillai biopic deets

Image : Biscuit King Rajan Pillai / All images are subjected to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து பிரிட்டானியா பிஸ்கட் ஐகானிக், பிஸ்கட் கிங் என அழைக்கப்படும் ராஜன் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இப்படத்தை பிரபல நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Suriya to act Britannia Ranjan Pillai biopic deets

Images are subject to © copyright to their respective owners.

அண்மையில் பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரனின் இயக்கத்திலான தங்கம் திரைப்படம் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகியிருந்தது. தவிர லூசிஃபர், ப்ரோ டாடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரித்விராஜ் தற்போது இந்த திரைப்படத்தை இயக்குவதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இவை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | “பான் இந்தியா படம்னே ஒன்னு இல்ல”.. மார்டின் படவிழாவில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் பேசியது என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

Suriya to act Britannia Ranjan Pillai biopic deets

People looking for online information on Biopic, Britannia, Prithviraj, Ranjan Pillai, Soorarai Pottru, Suriya will find this news story useful.