சூர்யா, தமிழக அரசின் முடிவு குறித்து அதிரடி கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கும் 'சூரரைப் போற்று' படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யா பாடிய மாறா தீம் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை அறிவு எழுதியிருந்தார். இந்த படத்தின் டீசரும் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Suriya Comments Tamilnadu Government about Public Exam

நடிகர் சூர்யா, தனது அகரம் ஃபவுண்டேசன் சார்பாக மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பை சூர்யா கடுமையாக எதிர்த்தார்.

இந்நிலையில் தற்போது 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசு ரத்து செய்துள்ளது. இதனையடுத்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.

மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor