சூர்யாவின் சூரரைப்போற்று : வெய்யோன்சில்லி பாடல்... Lyricist விவேக் சொல்லும் சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் கவிஞர் விவேக் எழுதியுள்ள வெய்யோன்சில்லி பாடல் குறித்த சர்ப்ரைஸ் விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

lyricist vivek reveals a surprise in suriya's soorarai pottru

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. நடிகை அபர்னா பாலமுரளி, மோகன்பாபு, காளிவெங்கட், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். விமான சேவையை தொடங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தின் டீசர் மற்றும் மாறா தீம் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்தது. இதையடுத்து அடுத்த பாடலான வெய்யோன்சில்லி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார்.

இந்நிலையில் வெய்யோன்சில்லி குறித்த சர்ப்ரைஸ் விஷயம் ஒன்றை விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தன் பதிவில், 'இதுவே நான் சூர்யாவுக்காக எழுதும் முதல் பாடல்,  இதில் ஆச்சர்யமான ஒரு ஒற்றுமை இருப்பது எனக்கே சர்ப்ரைஸாக இருந்தது. அது, பாடலின் முதல் வார்த்தையான வெய்யோன் என்றால் சூரியன் என்று பொருள்.  வெய்யோன்சில்லி என்றால் சூரியனின் ஒரு துண்டு' என அவர் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor