சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்களை வெறியேத்திய நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யா பாடிய மாறா தீம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்கும் முன்னே, 'சூரரைப் போற்று' படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், இந்த படத்தின் அடுத்த பாடலான 'வெய்யோன்சில்லி' பாடலை ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாட, இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாட்டு வெளியிடப்படும் தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். நிகேத் பொம்மி ரெட்டி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
The next single from #SooraraiPottru is #veyyonsilli #வெய்யோன்சில்லி sung by #harishsivaramakrishnan written by @Lyricist_Vivek ... @Suriya_offl #SudhaKongara @2D_ENTPVTLTD ... date and time will be announced by @2D_ENTPVTLTD @SonyMusicSouth .. excited 🙌
— G.V.Prakash Kumar (@gvprakash) January 30, 2020