சூர்யாவின் சூரரைப் போற்று : இது காதலர்களுக்கான பரிசு! அடுத்த அப்டேட் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Surya sudha kongara gvprakash soorarai potru song release date

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. நடிகை அபர்னா பாலமுரளி, மோகன்பாபு, காளிவெங்கட், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். விமான சேவையை தொடங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தின் டீசர் மற்றும் மாறா தீம் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்தது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான வெய்யோன்சில்லி பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13 அன்று மாலை 5 மணிக்கு இப்பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். விவேக் சூர்யாவுக்கு பாடல் எழுதுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor