''மனைவியாக பெருமைப்படுகிறேன்'' - ஆர்யாவிற்காக சாயிஷாவின் பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 06, 2019 03:28 PM
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் 'மகாமுனி'. இந்த படத்தை 'மௌனகுரு' படத்தை இயக்கிய சாந்த குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று (செப்டம்பர் 6) ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் குறித்து பிரபல நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், மகாமுனிக்காக வாழ்த்துகள் ஆர்யா. உணர்வுப்பூர்வமான இந்த படத்தை தியேட்டரில் மட்டும் போய் பாருங்கள். ஒட்டு மொத்த குழுவிற்கும் வாழ்த்துகள் . மனைவியாக பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.