Breaking: தமிழில் மூன்று ஹீரோக்களை இயக்கும் பா.ரஞ்சித் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 09, 2019 10:37 AM
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் 'மகாமுனி'. 'மௌனகுரு' படத்துக்கு பிறகு சாந்தகுமார் இயக்கியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் ஆர்யாவுடன் மஹிமா நம்பியார், இந்துஜா, இளவரசு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியான இந்த படத்தில் எஸ்.எஸ்.தமன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மூன்று கதாநாயகர்கள் கொண்ட இந்த படத்தில் ஆர்யாவுடன், நடிகர் தினேஷ் மற்றும் கலையரசன் நடிக்கவிருக்கிறார்கள். பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் படத்தை ஸ்ரேயா ஸ்ரீ மூவி நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.
Tags : Arya, Dinesh, Pa Ranjith