ஆர்யாவின் "மகாமுனி" படத்தில் இருந்து வெளியான ஸ்நீக் பீக் வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 08, 2019 07:51 PM
ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் படம் மகாமுனி. இந்த படத்தை மௌனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் இயக்குகிறார்.

இந்த படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் இந்துஜா, மஹிமா நம்பியார், ஜூனியர் பாலையா, ஜெய ப்ரகாஷ், அருள் தாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆர்யாவின் "மகாமுனி" படத்தில் இருந்து வெளியான ஸ்நீக் பீக் வீடியோ இதோ! வீடியோ
Tags : Arya, Indhuja, Mahima Nambiar, Santha Kumar, Magamuni