www.garudabazaar.com

OSCARS 2023: ஆஸ்கர் விருதுக்கு ஓட்டு போட்ட நடிகர் சூர்யா.. அவரே பகிர்ந்த அருமையான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா.

Suriya has Voted for 95th Oscars as a Award Committee Member

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்'.. OTT & சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்!

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன்  திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் சூர்யா பெற்றார்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த  'விக்ரம்' திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் சிறப்பு கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இதற்காக சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக கமல்ஹாசன் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது சூர்யா,   சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் துவங்க உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா, தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில், 95-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் & நபர்களுக்கு வாக்களித்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஆஸ்கர் போட்டியில் RRR படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "தல FANS.. 25 வருஷம் ஆகிடுச்சா?".. காதல் மன்னன் படம் பற்றி ட்வீட் செய்த பரத்வாஜ்!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya has Voted for 95th Oscars as a Award Committee Member

People looking for online information on 95th Oscars, Oscar 2023, Suriya will find this news story useful.