www.garudabazaar.com

மம்மூட்டி - ஜோதிகா நடிக்கும் புதிய படம்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மம்மூட்டி & ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார்.

Suriya visit to the sets of Mammooty Jyothika Kaathal The Core

மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி. மலையாளம் மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில்  பீஷ்ம பர்வம், சிபிஐ 5, புழு, ரோஸாக் உள்ளிட்ட திரைப்படங்கள் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி உள்ளன. தற்போது 'கிறிஸ்டோபர்', 'நண்பகல் நேரத்து மயக்கம்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் மம்மூட்டி நடித்து வருகிறார்.

Suriya visit to the sets of Mammooty Jyothika Kaathal The Core

மேலும் மம்மூட்டி மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

திருமணத்திற்கு பிறகு, பெண்களை மையப்படுத்தி கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் அதிகம் நடித்து வரும் நடிகை ஜோதிகா, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மம்மூட்டியுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார்.

Suriya visit to the sets of Mammooty Jyothika Kaathal The Core

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து ஜோதிகா நடிக்கும் திரைப்படத்தினை 'கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த ஜியோ பேபி  இயக்கி வருகிறார்.

"காதல் - The Core" என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜோதிகா பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

Suriya visit to the sets of Mammooty Jyothika Kaathal The Core

தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் வருகை தந்துள்ளார். மேலும் படக்குழுவினர் உடன் சேர்ந்து உணவு உண்ணும் புகைப்படம், நடிகர் மம்மூட்டி உடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya visit to the sets of Mammooty Jyothika Kaathal The Core

People looking for online information on காதல் - The Core, Jyothika, Mammooty, Suriya will find this news story useful.