www.garudabazaar.com

சூர்யா - 'சிறுத்தை' சிவா படம்.. வெளிநாட்டில் வேற லெவலில் உருவாகும் சண்டைக்காட்சிகள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின்

Suriya 42 Movie Next Schedule Shooting Update

படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read | "சூர்யா42" படத்தோட GENRE இதான்.. எடிட்டர் நிஷாத் யூசுப் சொன்ன சூப்பர் Exclusive தகவல்!

நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில் இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் பூஜை கடந்த (21.08.2022) அன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வு அகரம் பவுண்டேஷன் அமைந்துள்ள ராமாபுரத்தில் நடந்தது.

மேலும், இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

சிலநாட்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த  ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி துவங்கியது. திஷா பட்டாணி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் கோவா படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்தது என்றும், அடுத்த கட்ட படப்பிடிப்பு 60 நாட்கள் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு எடிட்டர் நிஷாத் யூசுப் பிரத்யேகமான பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்த படப்பிடிப்பு அடர்ந்த காட்டுப் பகுதியில், சண்டைக் காட்சிகளும் படமாக்கப்படும் எனவும் நிஷாத் யூசுப் கூறியுள்ளார்.

Also Read | வால்டர் வீரய்யா படத்தின் BOSS PARTY.. சிரஞ்சீவியின் அசத்தலான டான்ஸூடன் வெளியான LYRICAL VIDEO!

சூர்யா - 'சிறுத்தை' சிவா படம்.. வெளிநாட்டில் வேற லெவலில் உருவாகும் சண்டைக்காட்சிகள்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya 42 Movie Next Schedule Shooting Update

People looking for online information on Suriya, Suriya 42 Movie Updates will find this news story useful.